பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டணம்: ஆறு மாதங்களில் அமுலுக்கு

பொது பயணிகள் பேருந்துகளில் வங்கி அட்டைகள் (Credit Card / Debit Card) மூலம் பயணக் கட்டணம் செலுத்தும் முறை அடுத்த ஆறு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என இலங்கை (Sri Lanka) தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. பயணங்களின் போது பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதங்களைத் தடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் எனக் குறிப்பிடப்படுகிறது.



