இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் முதன்முறையாக 10,000 உறுப்பினர் மைல்கல்லைத் தாண்டியது

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் (Institute of Chartered Accountants of Sri Lanka - CA Sri Lanka), பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற அதன் வருடாந்த பட்டமளிப்பு விழா 2026 இல் (Annual Convocation 2026), தனது வரலாற்றில் முதல் முறையாக உறுப்பினர் எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டிய வரலாற்றுச் சிறப்பு மைல்கல்லைக் கொண்டாடியது.
நிறுவனத்தின் 67 வருடப் பயணத்தில் இம்மைல்கல்லு ஒரு திருப்புமுனையாகும்; பட்டயக் கணக்கியல் தொழிலின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் இலங்கையின் வாணிக, கூட்டுத்தாபன மற்றும் பொருளாதாரத் துறைக்கு அது அளிக்கும் பங்களிப்பையும், அதன் சர்வதேச இருப்பையும் இது பிரதிபலிக்கிறது.
நவம்பர் 4, 2026 இல் நடைபெற்ற விழாவில் 545 புதிய இணை உறுப்பினர்கள் (Associate Members - ACAs) சேர்க்கப்பட்டனர்; 66 உறுப்பினர்களுக்கு Fellowship (FCAs) வழங்கப்பட்டது.
Raigam Group of Companies-இன் மூத்த பணிப்பாளர் திரு கனக அமரசிங்க (Ganaka Amarasinghe) பிரதான விருந்தினராகக் கலந்து கொண்ட விழாவிற்கு, CA Sri Lanka தலைவர் திரு திஷான் சுபசிங்க (Tishan Subasinghe) தலைமை தாங்கினார்; துணைத் தலைவர் திருமதி அனோஜி டி சில்வா (Anoji de Silva), உறுப்பினர் உறவுகள் குழுத் தலைவர் திரு சமன் ஸ்ரிலால் (Saman Srilal) மற்றும் பிரதான நிர்வாக அதிகாரி திருமதி லக்மாலி பிரியங்கிக (Lakmali Priyangika) ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய உறுப்பினர்களிடம் உரையாற்றிய அமரசிங்க, “CA Sri Lanka-இலிருந்து பெற்ற தங்கள் தகுதி தொழில் சாதனையை விட மிகப் பெரியது; நிலையான வாணிகங்கள் மற்றும் பொருளாதாரங்களின் அடித்தளமான accountability, transparency மற்றும் trust கோட்பாடுகளை நிலைநிறுத்தும் தங்கள் திறனை இது குறிக்கிறது” என்றார்.
திஷான சுபசிங்க, “தங்கள் தகுதி கதவுகளைத் திறக்கும்; ஆனால் தங்கள் குணம், நேர்மை மற்றும் மாற்றத்தை உருவாக்கும் விருப்பமே தங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். Lead with courage. Act with integrity. Think boldly. Create positive change” என்றார்.
விழாவில் இரு சிறப்புப் புதிய உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்: பஹீரதன் பிரவீனா (Paheerathan Piravena) ‘President’s Award for the Most Outstanding New Member 2026’ பரிசைப் பெற்றார்; 22 வயதில் பட்டயக் கணக்காளராகத் தகுதி பெற்ற மொஹமட் ஷாமில் மொஹமட் மிஷால் (Mohamed Shamil Mohamed Mishal) ‘Youngest CA Member of the Year 2026’ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


