தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை (Sri Lanka) போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். நவம்பர் 06 முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இச்சேவை தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும்; சாதாரண பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இவை இயங்கும்.



