குவாத்தமாலா: சட்டமன்ற உறுப்பினரும் மூன்று பொலிஸாரும் சுட்டுக்கொலை

குவாத்தமாலாவின் கிழக்கு Zacapa மாகாணத்தின் Rio Hondo நகரில் வெள்ளியன்று இடம்பெற்ற ஆயுதத் தாக்குதலில், சட்டமன்ற உறுப்பினர் (MP) ஹூலியோ (Julio) போர்த்தியோ பாஸ் (boss) மற்றும் மூன்று பொலிஸ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். குறித்த பகுதி போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு அறியப்பட்டதாகும்.
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போர்த்தியோ பின்னர் உயிரிழந்ததாக அவரது UNE கட்சி உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


