ஜப்பானில் (Japan) 5.7 ரிக்டர் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் காயம் (injury/wound); அடுத்த நாட்களுக்கும் எச்சரிக்கை

ஜப்பானின் (Japan) மேற்கு ஷிசுவோக்கா (Shizuoka) பிரிவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:04 மணியளவில் (சனிக்கிழமை 16:00 GMT) 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கத்தில், ஐச்சி மற்றும் ஷிசுவோக்கா (Shizuoka) பிரிவுகளில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமமாட்சு (Hamamatsu) நகரம் உட்பட ஐச்சி பிரிவிற்கு அருகாமையிலுள்ள பரந்த பகுதிகளும், பண்டைய தலைநகரங்களான கியோத்தோ, நாரா மற்றும் யமனாஷி (Yamanashi) பிரிவுகளும் நடுக்கத்தை உணர்ந்தன.
இந்த நிலநடுக்கம் தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நடுவண்மையிலிருந்து வெகுதூரத்திலுள்ள தோக்கியோவில் நடுக்கம் (tremor) உணரப்படவில்லை.
ஜப்பானிய (Japanese) தொலைக்காட்சிகள், கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு வீதிகளில் கண்ணாடித் துண்டுகள் சிதறிக்கிடக்கும் காட்சிகளையும், புத்தகக் கடையொன்றில் அலமாரிகளிலிருந்து புத்தகங்கள் விழுந்து குவிந்துள்ள கார்ச்சிகளையும் வெளியிட்டன.
நடுக்கத்தின்போது தப்பி ஓட முயன்றபோது படிக்கட்டுகளில் விழுந்ததன் காரணமாகவும் சிலர் காயமடைந்துள்ளனர்.
அடுத்த வாரத்தில், குறிப்பாக அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில், வலுவான நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதற்காக மக்கள் தயாராக இருக்குமாறு ஜப்பானிய (Japanese) வானிலை நிறுவனம் எச்சரித்துள்ளது.
"மண்சரிவுகள், உருண்டு விழும் பாறைகள் மற்றும் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்" என நிறுவனத்தின் அதிகாரி அயாடக்கா எபிடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



