அமெரிக்க (America) MV-22B ஒஸ்ப்ரே (Osprey) விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை

அமெரிக்க (America) கடற்படைக்குச் சொந்தமான, போயிங் (Boeing) நிறுவனம் தயாரித்த MV-22B ரக ஒஸ்ப்ரே (Osprey) விமானம் நேற்று நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இவ்விமானத்தை உலங்குவானூர்தியாகவும் விமானமாகவும் இருவிதத்தில் பயன்படுத்த முடியும்.
இதன் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சுழல் விசிறிகளைத் தேவைக்கேற்பத் திருப்பி, உலங்குவானூர்தியைப் போன்று செங்குத்தாக மேலெழும்பவும், சாதாரண விமானத்தைப் போன்று வேகமாகப் பறக்கவும் செய்ய முடியும். புறப்படுவதற்கு ஓடுபாதை தேவையில்லை என்பது இதன் விசேட அம்சமாகும்.


