சிறிலங்கன் விமான சேவைக்கு ரூ. 35.6 பில்லியன் நட்டம்

நிதி அமைச்சின் அரையாண்டு நிதி நிலைமை அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிலங்கன் விமான சேவை வரிக்கு முந்திய நிலையில் 35.6 பில்லியன் ரூபாய் நட்டத்தைப் பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்குப் போர் பதற்றம், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு, நீண்டகால நிதி நெருக்கடி ஆகியவை காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
குறித்த காலத்தில் விமான சேவையின் வருமானம் 82.8 பில்லியனாக அதிகரித்தாலும், செலவினம் 40.4 சதவீதத்தால் உயர்ந்து 95.2 பில்லியன் ரூபாயை எட்டியது. விமான எரிபொருள் செலவு 93 சதவீதத்தால் அதிகரித்தமையே பிரதான காரணம் என அறிக்கை தெரிவிக்கிறது. வெளிநாட்டு நாணய மாற்று அழுத்தங்களும் நிதி நிலையை மேலும் பாதித்துள்ளன; நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

