Tamil Newsசெவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2026
சமீபத்தியம்
நாடு மீண்டும் வங்குரோத்து (bankruptcy) நிலையை நோக்கி நகர்வதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) எச்சரிக்கைதம்புட்டேகமயில் (Thambuttegama) நிவாரணம் தேவைப்படும் குடும்பம் ஒன்றுக்கு வீடு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga) சொந்த நிதியில் நிர்மாணம்புதுப்பிப்பு (Updated): புற்றுநோய் கதிர்வீச்சுச் சிகிச்சை (radiotherapy): ஐந்து வைத்தியசாலைகளுக்கான கருவிக் கொள்வனவு தாமதம் குறித்து மருத்துவர் எச்சரிக்கைபுதுப்பிப்பு (Updated): கங்குவா (Kanguva) பின்னடைவுக்குப் பிறகு சூர்யா (Suriya): மூன்றாவது ரூ.200 கோடி வசூலை (box office) நோக்கி சீன் (Scene)பாகிஸ்தான் (Pakistan) தார்பேலா (Tarbela) நீர்மின் திட்டத்தில் (hydropower project) தடுப்புச் சுவர் இடிந்ததாகத் தகவல்இலங்கைச் (Sri Lanka) சுற்றுலாவை (tourism) மேம்படுத்த சர்வதேச ஒலிபரப்பு நிறுவனங்கள் (broadcasting organisations) விருப்பம்: அமைச்சர் (Minister)நொச்சியாகமவில் (Nochchiyagama) கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 38 வயது நபர் கைதுசிங்கராஜ காட்டில் (Sinharaja Forest) அரிய பூச்சி, ஊர்வன இனங்களைச் சேகரித்த குற்றச்சாட்டில் நான்கு சீன நாட்டவர் (Chinese nationals) கைது

பலாலி ஆசிரியர் கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி இன்றும் இராணுவ வசம் - உடனடி விடுவிப்புக்கு சிறீதரன் வலியுறுத்தல்

பலாலி ஆசிரியர் கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி இன்றும் இராணுவ வசம் - உடனடி விடுவிப்புக்கு சிறீதரன் வலியுறுத்தல்
பலாலி ஆசிரியர் கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி இன்றும் இராணுவ வசம் - உடனடி விடுவிப்புக்கு சிறீதரன் வலியுறுத்தல் படம்: Dennis Sylvester Hurd (CC0)

யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி ஆசிரியர் பயிற்சி (exercise/training) கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி தற்போதும் இராணுவ வசமே உள்ளது என்றும், கல்வியியல்துறையை இராணுவம் (military) தன்வசம் வைத்துள்ளமை நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையையே காட்டுகிறது என்றும் இலங்கைத் (Sri Lanka) தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (MP) சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் காணியை அரசு உடனடியாக விடுவித்து, அதனை யாழ்ப்பாணம் (Jaffna) பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் (parliament) வியாழக்கிழமை (06.11.2026) இடம்பெற்ற "கல்வியியற் கல்லூரிகளைப் பல்கலைக்கழகப் பீடங்களாக மாற்றுவதற்கான தனிநபர் பிரேரணை" மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தில் அமைந்துள்ள கொட்டகலை கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி என்பன மலையகத்தில் வாழும் 9 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களுக்காகப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட பீடங்களாக மாற்றப்படும்போது, அது அப்பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவுசெய்யக் கூடியதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, யாழ்ப்பாணம் (Jaffna) பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையானது ஒரு தனித்துவமான கல்விப் பீடமாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படும்போதுதான் முகாமைத்துவத் துறையிலுள்ள அதிபர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சித் தேவைகள் வளர்ச்சியடைய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகபூர்வத் தகவல்களின்படி, வரலாற்றுப் பெருமைமிக்க பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் நிலப்பரப்பு இப்போதும் இராணுவத்தின் வசமே காணப்படுகிறது.

கல்வித்துறையை இராணுவப் பொறிமுறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றால், இந்த நாட்டின் கல்வித்துறை எந்தளவுக்கு முடங்கியுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும் என்றும், பல நூற்றுக்கணக்கான சிறந்த ஆசிரியர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை இப்போதும் இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

வட பகுதி மக்களின் காணிகளை விடுவிப்போம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, உடனடியாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் காணிகளையும் விடுவித்து, அதனை யாழ்ப்பாணம் (Jaffna) பல்கலைக்கழகத்தின் பிரதான பீடமாக மாற்றியமைக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.